செப்டம்பர் 1 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஆகஸ்ட் 14) வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பின்உருவாகியுள்ள படம் “கருமேகங்கள் கலைகின்றன”. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களான பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் கவுதம் வாசுதேவ் மேனன், மற்றும்அதிதி பாலன், யோகிபாபு, ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு என்.கே ஏகாம்பரமும், படத்தொகுப்பை பி.லெனினும் மேற்கொண்டுள்ளனர். படத்தினை டி.துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.
குடும்பத்துடன் அமர்ந்து உணர்வுபூர்வமாக பார்க்ககூடிய அத்தனை அம்சங்களும் படத்தில் இருப்பதை டிரெய்லர் மூலம் உணரவைக்க முயற்சித்துள்ளார் தங்கர் பச்சான். குறிப்பாக உறவுகளிடையே நிகழும் சிக்கல்களை ட்ரெய்லர் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
“ஒரே வீட்ல அப்பனும் பிள்ளையும் 10 வருஷமா பேசாம இருந்திருக்கோம்” என்ற வசனம் தந்தை – மகன் உறவுச் சிக்கலை பேசுகிறது.
நேர்மையான தந்தை, ஊழலுக்கு துணை போகும் மகன். இந்த ஒருவரிகதைக்கு இடையில் யோகிபாபு கதாபாத்திரம் மற்றொரு துணைக்கதையாக விரிகிறது. பயணத்தில் சந்திக்கும் நல்ல மனிதராக யோகிபாபு.
அவருக்கு ஒரு தனிக்கதை. அதிதி பாலன் காவல் அதிகாரியாக பெண் உரிமைகளை பேசுகிறார். வணிகம் சார்ந்த கமர்சியல் சினிமாவுக்கு மத்தியில் நல்லதொரு ஃபீல்குட் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு கருமேகங்கள் கலைகின்றன படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
இராமானுஜம்
சுதந்திர தின விழா: புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்