பிரபல ஹிந்தி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டன்கி”.
இந்த படத்தில் ஷாருக்கானுடன் நடிகை டாப்ஸி பன்னு மற்றும் நடிகர் விக்கி கௌசல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் டன்கி படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
வரும் டிசம்பர் 21 ஆம் தேதி டன்கி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று டன்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
வெளிநாடு போக வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்கள், ஆங்கிலம் தெரியாததால் வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிறது. எப்படியாவது வெளிநாடு சென்று விட வேண்டும் என்று அவர்கள் எடுக்கும் முயற்சிகளால் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர். அதிலிருந்து எப்படி அவர்கள் தப்பித்தார்கள், வெளிநாட்டுக்கு சென்றார்களா? இல்லையா? என்பதே இந்த படத்தின் கதை.
ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் முதன்முறையாக இணைந்து பணியாற்றி உள்ளதால் டன்கி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஷாருக்கானின் டன்கி படத்திற்கு போட்டியாக பிரபாஸின் சலார் படமும் வெளியாக இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் அதிக வசூல் செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
மின்சார ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள்… யூடியுபர் மீது பாய்ந்தது சைபர்கிரைம் வழக்கு!