விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் மார்ச் 29-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஹாட் ஸ்பாட். இப்படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரெய்லர் முழுக்கவே அருவருக்கத்தக்க வார்த்தைகளும், ஆபாசமான கதாபாத்திர வடிவமைப்புகளும் நிறைந்திருந்தது. இதனால் டிரெய்லர் வெளியானபோது ஹாட் ஸ்பாட் திரைப்படம் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், “நீங்க கண்டிப்பா தியேட்டருக்கு வந்து படம் பார்த்தீங்கன்னா உங்களுக்கு படம் பிடிக்கும். அப்படி பிடிக்கவில்லை என்றால் என்னை காலணியால் கூட அடியுங்கள்” என்று பேசியிருந்தார்.
ஆனால், படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் விமர்சனங்கள் பாசிட்டிவாக இருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் தியேட்டருக்கு சென்று ஹாட் ஸ்பாட் படத்தை பார்த்தனர்.
ஹேப்பி மேரிட் லைப், கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி, ஃபேம் கேம் என நான்கு தனித்தனி கதைகளைக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஹாட்ஸ்பாட் படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மே 17-ஆம் தேதி அமேசான் பிரைம், ஆஹா ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாக உள்ளது. ஓடிடி தளத்தில் வெளியான பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று குஷ்பு… இன்று ராதிகா… மீண்டும் கைதாகும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி?
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது – மெட்ரோ நிர்வாகம்