பிக்பாஸ் சீசன் 7: இரட்டை கமல் கொடுத்த செம ட்விஸ்ட்!
கடந்த சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரசிகர்களை அசரவைக்கும் வகையில் அசத்தலான ட்விஸ்ட் அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் இன்று (ஆகஸ்ட் 25) வெளியிட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் இதுவரை நடந்து முடிந்துள்ள 6 சீசன்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றன.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் அந்த 20 போட்டியாளர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பிக்பாஸ் சீஸன் 7 நிகழ்ச்சியின் புதிய புரோமோ விடியோவை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
ஒரே சீசன்…. ரெண்டு வீடு!
அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர், சென்னைவாசி என்ற இரட்டை வேடத்தில் கமல் பேசி அதகளப்படுத்துகிறார். அதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் அதை விட அவர் தெரிவித்துள்ள இந்த 7வது பிக்பாஸ் சீசனின் ட்விஸ்ட் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது இதுவரை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ஒரு வீட்டில் மட்டும் போட்டியாளர்கள் தங்கியிருந்தனர். ஆனால் இந்த சீசனில் 2 வீடுகளில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1695068225309217244?s=20
இதனையடுத்து, “சும்மாவே வீடு ரெண்டாகும் அளவுக்கு போட்டியாளர்கள் சண்டையிடுவார்கள்… இந்த சீசனில் வீடே இரண்டாகி விட்ட நிலையில் என்னாகுமோ?” என்று கமல் கூறிய அதே ரியாக்ஷனை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வெளிபடுத்தி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பள்ளி வேன் விபத்து: 25 மாணவிகள் உட்பட 32 பேர் படுகாயம்!
மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை: அரசாணை வெளியீடு!