பிரபல நடிகை ஹனி ரோஸ், கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் தன்னை நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் இரட்டை அர்த்தம் கொண்ட தவறான வார்த்தைகளை தன்மீது சமூக வலைதளத்தில் பயன்படுத்தி வருவதாகவும் முகநூலில் பதிவு செய்தார்.
இதை பார்த்த 30க்கும் மேற்பட்டோர் உடனே ஹனி ரோஸின் போஸ்டுக்கு முகநூலில் ஆபாசமாக கருத்து தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஹனி ரோஸ் கொச்சி நடிகர்கள் சங்கம் மற்றும் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், கும்மளம் பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர், பாபி செம்மனூரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு ஜாமீனில் பாபி வெளி வந்தார்.
இந்த நிலையில், நடிகை ஹனிரோஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பாலக்காடு ஒலவக்கோடு பகுதியில் அஞ்சலி எலக்ட்ரானிக்ஸ் கடையை திறந்து வைக்கிறேன். 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த திறப்பு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் அனைவரும் விழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஹனிரோஸின் இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர். ஒருவர் கூட கடை திறப்புக்கு போக கூடாது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், அந்த கடை ஒரே மாதத்தில் மூடப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்