நடிகை ஹனி ரோஸ் கண்ணூரில் பாபி செம்மனூர் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது, அவரிடத்தில் அந்த கடை அதிபர் பாபி செம்மனூர் தவறாக நடந்து கொண்டதாக எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்தார். சமூகவலைத் தளத்தில் ஹனிரோஸ் உடல் அழகு பற்றி பாபி பதிவிட்டு வந்தாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பாபி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளி வந்தார். இந்த நிலையில், ஹனிரோஸ் பாலக்காடு மாவட்டம் ஓலக்கோட்டில் நடந்த எலக்ட்ரானிக் ஷாப் திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அங்கு, அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் அவரை காண குவிந்தனர்.
லைட் ப்ளு வண்ணத்திலான உடை அணிந்து அவர் திறப்பு விழாவில் பங்கேற்றார். முன்னதாக, பாபியின் ஆதரவாளர்கள், ஹனிரோஸ் பங்கேற்கும் திறப்பு விழாவுக்கு யாரும் போகக் கூடாது. கடைதிறப்பு விழா வெறிச்சென்று இருக்க வேண்டும். ஹனி ரோசுக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டுமென்று சமூகவலைத் தளத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.
எனினும், இந்த பிரச்சாரத்தை மீறி ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் ஹனிரோஸை காண திரண்டனர். பாபி கைதுக்கு பிறகு ஹனி ரோஸ் பங்கேற்கும் முதல் கடை திறப்பு விழா என்பதால் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக கடை திறப்பு விழா நடந்து முடிந்தது. கடை திறப்பு விழா வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹனிரோஸ் தொடர்ந்து, கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.