அறிவியல் தமிழனின் வரலாறு…தம்பிக்கு வாழ்த்து சொன்ன அண்ணன் !

சினிமா

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை நாம் தமிழர் இயக்க தலைவரும், இயக்குனருமான சீமான் பாராட்டியுள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகனாக சாக்லேட் பாயாக இருந்த மாதவன் ராக்கெட் தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இவரின் முதல் படமே பிளாக்பஸ்டர் அடித்துள்ளது. ராக்கெட் தி நம்பி எஃபெக்ட் என்னும் படத்தை இயக்கிய மாதவன் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.

நம்பி நாராயணனின் வழிகாட்டுதலின்படியே உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யா, ஷாருக்கான் இருவரும் காமியோ ரோலில் நடித்தனர். இதற்காக இருவரும் பணம் எதுவும் பெறவில்லை என மாதவன் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

தகவல் திருட்டு புகாரில் உளவுத்துறை இடம் சிக்கும் விஞ்ஞானி படும் துயரங்கள் மற்றும் அவரது குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவாகிய இந்த படம் சுமார் 350 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலகமெங்கும் இந்த படம் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் படம் குறித்த விமர்சனத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் அன்புத்தம்பி மாதவன் அவர்கள் தயாரித்து இயக்கி நடித்து வெளிவந்துள்ள ராக்கெட் நம்பி விளைவு திரைப்படத்தை பார்த்து ரசித்ததாகவும் இப்படி ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்கியதற்கு மாதவனுக்கு வாழ்த்துக்கள் ”என பாராட்டியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள மாதவன், “எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த குழுவும் மிகப்பெரிய விருதை பெற்றுள்ளது போல் உணர்கிறேன். என் மகிழ்ச்சியை என்னால் அடக்க முடியவில்லை. என் இதயம் நன்றியுடன் பணிவுடன் நிரம்புகிறது. நீண்ட இதய பூர்வமான பதிவுக்கு நன்றி அண்ணன் சீமான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீமானின் தம்பி படத்தில் மாதவன் நாயகனாக நடித்தது குறிப்பிடத் தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

முன்னாள் மனைவிகள்: ஆமீர்கான் சொன்ன ஆச்சரிய தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *