PT SIR ஆக கலக்கும் ஹிப் ஹாப் ஆதி… டிரைலர் எப்படி?

Published On:

| By Selvam

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஹிப் ஹாப் தமிழா ஆதி கடந்த 2017 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் ஹீரோவாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் படத்தை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ படமான வீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் ஓரளவு நல்ல வசூலை ஈட்டியது.

அதனைத் தொடர்ந்து தற்போது PT SIR என்ற திரைப்படத்தில் ஆதி ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி, பாக்கியராஜ், பிரபு, பாண்டியராஜ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா குழு இசையமைத்து உள்ளது. இந்த படம் ஹிப் ஹாப் தமிழா குழு இசையமைக்கும் 25 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது PT SIR படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பள்ளி மாணவிகளுக்கு ஆதரவாக சட்ட ரீதியாக போராடும் ஒரு PT மாஸ்டராக ஆதி இந்த படத்தில் நடித்திருக்கிறார். காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் வேணுகோபால்.

PT SIR திரைப்படம் வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி: திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

35 நாட்களில் சிம்பொனி: ரசிகர்களுக்கு ராஜா சொன்ன குட் நியூஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel