நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30 அன்று வெளியான ‘பொன்னியின் செல்வன்‘ இதுவரை உலக அளவில் 400 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த வசூல் செய்துள்ளது.
இதில் திரையரங்குகள் மூலமாக 180 கோடி ரூபாயை கடந்து தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த படத்தில் சின்ன பழுவேட்டைரையர் எனும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம் மாறி விட்டது!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு(இ)ப்ப லாம்! எழுப்பினால் …இன்னும் ஒரு 100!” என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே படம் சம்பந்தமாக ஏராளமான எதிர்மறையான விமர்சனங்கள், கருத்துக்கள் என சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றன
இவை எல்லாம் பொன்னியின் செல்வன் படத்திற்கான புரமோஷனாக மாறி வருகின்றன.
தயாரிப்பு தரப்பும், இயக்குநர் தரப்பும் எதற்கும் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்து வருகிறது.
தமிழக அரசியலில் மதம், மத உணர்வுகள் சம்பந்தமான சூடான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் பார்த்திபன் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவுக்கு சிலர், ”பார்த்திபன் பார்வையில் இந்து மத சர்ச்சையால்தான் கோடிகளை வசூலிக்கிறதா ‘பொன்னியின் செல்வன்’? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இராமானுஜம்
எலிமினேஷன்னா என்னா? ஜி.பி முத்து
அஃப்ரிடியின் பந்துவீச்சை அடித்து ஆடவேண்டும்: காம்பீர் அறிவுரை