1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தை ரீ ரிலீஸ் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று கமல்ஹாசன் நடிப்பில் குணா படம் வெளியானது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில், குணா பட பாடலான, “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடல் இடம் பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‘குணா’ திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை.
இந்தசூழலில் குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி கன்ஷியாம் ஹேம்தேவ், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் படத்தின் முழு உரிமைதாரராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று (ஜூலை 10) விசாரித்த நீதிபதி வேல் முருகன், குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இம்மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரூ.6,778 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம்… நகரமயமாக்கலில் தமிழகம் முன்னிலை : நகராட்சி நிர்வாகத்துறை
அண்ணாமலை vs செல்வப்பெருந்தகை : தலைவர்களின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்!