மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனு மீது இன்று (ஜூன் 28) மாலை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி டிரெய்லர் வரை ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடுத்தடுத்து வெளியான பாடல்களும் அந்த எதிர்பார்ப்பை குறைக்காமல் பார்த்துக் கொண்டன.
மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் ஒப்பந்தப்படி உதயநிதி ஸ்டாலின் இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும்,
உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் தான் அவரது கடைசி படம் என்று கூறியுள்ள நிலையில் ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தனக்கு இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஜூன் 23 ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு மனு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 28 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில் ரெட் ஜெயிண்ட் தரப்பில் வழக்கறிஞர் இளங்கோ, ஏஞ்சல் பட தயாரிப்பாளர் தரப்பில் தியாகேஸ்வரன் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின் போது ஏஞ்சல் படத்தை உதயநிதி ஸ்டாலின் முடித்துக் கொடுத்துவிட்டார் என்று வழக்கறிஞர் இளங்கோ வாதிட்டார்.
அதுமட்டுமின்றி ரெட் ஜெயிண்ட் மூவில் லிமிடெட் நிறுவனம் மூலம் தான் மாமன்னன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் படத்திற்கு ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உடன் தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஏஞ்சல் படத்திற்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவே படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் வாதிட்டார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் படத்தை முடித்துக் கொடுக்கவில்லை. அதற்கான ஆதாரம் உள்ளது என்று தயாரிப்பாளர் ராமசரவணன் தரப்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன் பென் டிரைவை சமர்ப்பித்தது.
இரு தரப்பு வாதங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட பென் டிரைவையும் பார்த்த நீதிபதி குமரேஷ் பாபு, மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும்,
எனினும் வழக்கின் தீர்ப்பை இன்று மாலை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மோனிஷா
செந்தில் பாலாஜி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!
“நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – அமைச்சர் பெரியகருப்பன்
This website has lots of really useful stuff on it. Thanks for informing me.
Simply wish to say the frankness in your article is surprising.