மூன்று வருட இடைவேளை- முட்டி மோதும் விக்ரம்: ஆறுதலான நீதிமன்றத் தீர்ப்பு!

சினிமா

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ள படம், ’கோப்ரா’.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், இயக்குரர் கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஆகஸ்ட் 31ம்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த வருடம் வெளியான நேரடி தமிழ்ப் படங்களில் ’விக்ரம்’, ’பீஸ்ட்’, ’எதற்கும் துணிந்தவன்’, ’வலிமை’, ’டான்’, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் வசூல் அடிப்படையில் முன்னணி பட்டியலில் இடம்பிடித்தன.

தற்போது வெளியாகி இருக்கும் ‘விருமன்’, ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களின் வசூலை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது.

அதேநேரத்தில், இந்தப் பட்டியலில் இடம்பெறும் வகையில் ’கோப்ரா’ படக்குழு தங்களது முன் தயாரிப்பு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த மூன்று வருடங்களாக விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள், திரையரங்குகளில் வெளியாகவில்லை.

அதனால் ’கோப்ரா’ படம் திரையரங்குகளில் வசூல் அடிப்படையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தென்னிந்தியா முழுவதும் கோப்ரா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விக்ரம் படக்குழுவுடன் பங்கேற்று வருகிறார்.

highcourt bans release of cobra

கொச்சியில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘கோப்ரா’ குழுவினர், மாணவ, மாணவிகளை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது படத்தின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்விக்கு பதிலளித்த விக்ரம், ‘‘படத்தின் வெற்றி தோல்விகள், உளவியல்ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பெரும் போராட்டத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படம் ரசிகர்களிடம் சென்றடையாத நேரங்களும் உண்டு. அது கடினமாக இருக்கும்” என்றார்.

நடிகர் விக்ரமின் பதிலைக் கேட்ட கேரள மாநிலத்தின் முன்னணி விநியோகஸ்தர் சிபு தமிம், “ நடிகர் விக்ரமின் பதிலில் மூன்று வருடங்களாக தனது படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்கிற ஏக்கம், விரக்தி வெளிப்பட்டது” என தெரிவித்தார்.

இந்த நிலையில் ’கோப்ரா’ படத்தை திரையரங்கை தவிர திருட்டுத்தனமாக இணையதளங்களில் பார்ப்பதை தடுக்கும் வகையில் சட்டபூர்வமான நடவடிக்கையில் தயாரிப்பாளர் லலித்குமார் ஈடுபட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக ‘கோப்ரா’ படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1,788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ”பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட்செலவில், பல போராட்டங்களுக்குப் பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.

திரைக்கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்” என வாதிட்டார். இதையடுத்து, நடிகர் விக்ரமின் ’கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இராமானுஜம்

‘கோப்ரா படம் பார்க்க போலாம் வாங்க’ : முதல்வரை அழைத்த கல்லூரி மாணவர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *