நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் வழக்கு : நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று(டிசம்பர் 12) உத்தரவிட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நடிகை நயன்தாரா பற்றிய ஆவணப்படம் வெளியானது.

இதில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி வீடியோவை பயன்படுத்தியதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா தெரிவித்திருந்தார்.

அதுபோன்று அனுமதி இனறி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அனுமதி இன்றி காட்சியை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், அந்த காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (டிசம்பர் 12) விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி நயன்தாரா, அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த பதில் மனுக்களுக்கு தனுஷ் தரப்பிலும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ரஜினிகாந்த் பிறந்தநாள்… தலைவர்கள் வாழ்த்து!

பிள்ளை பெத்துக்க மாட்டேங்குறாங்க… மாற்றி யோசித்த ஜப்பான் அரசு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts