அவதார் 2 வசூல்: இந்தியாவில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

சினிமா

அவதார் 2 உலகம் முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், அதிக வசூலையும் குவித்து வருகிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பண்டோரா காட்சி, குழந்தைகள் முதல் பெரியவர்களையும் ரசிக்க வைத்தது. தவிர, வசூலிலும் சாதனை நிகழ்த்தியது.

3 ஆஸ்கார் விருதுகளை வென்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது.

high collections in avatar two movie

உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியான அவதார் 2 திரைப்படம் இந்தியாவிலும் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குடும்பங்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட காட்சிகள், தத்ரூபமான கிராபிக்ஸ் உள்ளிட்டவையும் படத்திற்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

இதன்மூலம் அவதார் 2 இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுதும் வசூலை குவித்து வருகிறது. இப்படம் வெளியான டிசம்பர் 16ஆம் தேதி மட்டும் இந்தியாவில் 40 கோடி ரூபாய் வசூலானது. தற்போது இந்தியாவில் மட்டும் இப்படம் 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இப்படம், இந்தியா தவிர்த்து, அமெரிக்கா, சீனா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் அதிக வசூலை குவித்து வருகிறது. அதன்படி, அவதார் 2 வெளியான 5 நாட்களில் இதுவரை உலக அளவில் 4,200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. விரைவிலேயே இப்படம் 10 ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ.பிரகாஷ்

ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்!

அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.