நடிகை நித்யாமேனன் ஜெயம் ரவி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. வழக்கமாக தமிழ் படங்களில் டைட்டில் கார்டு போடும் போது ஹீரோக்களின் பெயர் முதலில் இடம்பெறும். இதையடுத்து, ஹீரோயின் பெயர் வரும்.
சில சமயங்களில் கவுரவ வேடங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால் அவர்கள் பெயர்தான் முதலிடம் இடம்பெறும். ஆனால், காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் நித்யா மேனன் பெயர் இடம் பெற்றுள்ளது. அடுத்ததாக ரவி மோகன் பெயர் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து ரவி மோகன் கூறுகையில், “திட்டமிட்டுதான் நித்யா மேனன் பெயர் முதலிடம் இடம் பெற வைத்துள்ளோம். அவரின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இந்த விஷயம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கிடையே , சினிமா செட்டில் உள்ள ஆண், பெண் பேதம் பற்றி நித்யாக மேனன் பேசியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, “சினிமா செட்டில் நான் மிகச்சிறப்பாக நடித்தால் காட்சி எடுக்கப்பட்டு முடிந்ததும் செட்டில் அமைதி நிலவும். அதே வேளையில், நடிகர்கள் சிறப்பாக நடித்தால் காட்சி முடிந்ததும் கரகோஷம் எழும்.
சினிமா செட்களில் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நடத்தப்படுகின்றனர். நடிகைகளின் கேரவன் நிறுத்தப்படும் இடத்தை கொண்டே நாம் அந்த பேதத்தை அறிந்து கொள்ள முடியும் அல்லது நிகழ்ச்சிகளில் நடிகைகளை அழைக்கும் விதத்தை கொண்டே இந்த பேதங்களை தெரிந்து கொள்ளலாம். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் அவர்களுக்குரிய மரியாதையை பேதம் பார்க்காமல் வழங்க வேண்டும்” என்கிறார்.
தற்போது, நித்யா மேனன் தனுசுடன் இட்லிக்கடை விஜய் சேதுபதியின் டியர் எக்ஸஸ் என்ற படங்களில் நடித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்