தசரா படத்தின் வெற்றிக்கு பிறகு அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கத்தில், நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாய் நான்னா”. வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஹாய் நான்னா படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
அப்பா மகளின் உறவை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், Glimpse வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து, இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஹாய் நான்னா படத்தின் டீசர் வரும் அக். 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
AUSvsSA: சவாலான ஸ்கோர் குவித்த தென்னாப்பிரிக்கா… ஜெயிக்குமா ஆஸ்திரேலியா?
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கு : நீதிபதி உத்தரவு!