இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!

சினிமா

இந்த வாரம் வெளிவர இருக்கும் ஓ.டி.டி சீரிஸ், திரையரங்கில் வெளியாகவிருக்கும் படங்களின் தொகுப்புகளை இங்கே காணலாம்:

ஆகஸ்ட் 16, 1947

முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பொன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.கெளதம் கார்த்திக் நடிப்பில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

செங்காடு என்கிற கிராமத்திற்கு மட்டும் சுதந்திர தின விழா ஒருநாள் தள்ளிப்போகிறது.

இதனால் அங்கு என்ன பிரச்சனை ஏற்ப்படுகிறது என்பதை சொல்லும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம். திரையரங்குகளில் நாளை (ஏப்ரல் 7) வெளியாகிறது.

முந்திரிக்காடு

இரண்டு சமூகங்களுக்கிடையே நடக்கும் காதல் கதை தான் முந்திரிக்காடு படத்தின் களம்.

மு.களஞ்சியம் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

கொரோனா பேப்பர்ஸ்

தமிழில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் ரீமேக் இந்த கொரோனா பேப்பர்ஸ். ஷேன் நிகாம், டாம் ஷைன் சாக்கோ, காயத்ரி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரியதர்ஷன்.

கோலாம்பி

டி.கே. ராஜீவ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகை நித்யா மேனன் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் நாளை(ஏப்ரல் 7) திரையரங்குகளில் வெளியாகிறது.

கும்ரா

தமிழில் ஹிட் அடித்த ’தடம்’ படத்தின் இந்தி வெர்சன் தான் இந்த கும்ரா. மிரினால் தாக்கூர், ஆதித்யா ராய் கபூர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

தி போப்பே’ஸ் எஸோரசிஸ்ட்

பாதிரியார் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த அமானுஷ்ய சம்பவங்கள் பற்றிப் பேசுகிறது இந்த The Pope’s Exorcist .

ரஸல் க்ரோ இந்தப் படத்தில் பாதிரியராக நடித்திருக்கிறார். இந்தப்படம் நாளை(ஏப்ரல் 7) தமிழ், இந்தி , தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தி சூப்பர் மரியோ ப்ரோஸ்

தி சூப்பர் மரியோ ப்ரோஸ் அனிமேஷன் திரைப்படம் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் வீடியோ கேம் விளையாட்டான ’சூப்பர் மேரியோ’ வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் நாளை(ஏப்ரல் 7) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

புர்ஹா

எஸ்.எம். சர்ஜுன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கலையரசனும், மிர்னாவும் நடித்திருக்கிறார்கள். ஆஹா ஓ.டி.டி தளத்தில் இப்படம் நாளை வெளியாகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மோடி, அமித்ஷா நட்டா: தம்பிதுரையின் அடுத்தடுத்த சந்திப்புகள்!

ஹரிபத்மனுக்கு ஆதரவாக நடிகை அபிராமி: கலாஷேத்ராவில் நடப்பது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *