அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், 4ஆ தேதி இரவு 9.30 மணிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதனை காண, ஹைதராபாத்தில் சிக்கட்பள்ளி என்ற இடத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.
அப்போது, புஷ்பா-2 படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன், முன்னறிவிப்பின்றி திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார். அல்லு அர்ஜுனின் வருகையை அறிந்த ரசிகர்கள், திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், கணவர் மற்றும் மகனுடன் சென்ற 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்கிற பெண் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார். அவரின் 8 வயது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அல்லு அர்ஜூன் ரேவதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். வருங்காலத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், படம் பார்க்க சென்று மனைவியை இழந்த ரேவதியின் கணவர் பாஸ்கர் கூறுகையில், ”சமீபத்தில்தான் எனக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனது மனைவிதான் அவரின் கல்லீரலில் பாதியை கொடுத்து எனது உயிரை காப்பாற்றினார். இப்போது, அவரை நான் இழந்து நிற்கிறேன். என் வருங்காலத்தில் நான் எப்படி வாழ போகிறேன் என்றே தெரியவில்லை” என்று கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்கர், அவரின் மனைவி ரேவதி குழந்தைகள் அனைவருமே அல்லு அர்ஜூனின் தீவிர ரசிகர்களாம். அதனால், முதல் நாளே படத்தை பார்க்க சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
74 வயதில் முட்டையிட்ட அரிய பறவை… எப்படி நிகழ்ந்தது?
அந்த அறிவு கூட இல்லை அந்தாளுக்கு… ஆதவ் அர்ஜூனாவுக்கு உதயநிதி பதிலடி!