சமீபத்தில் மலையாள சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக வரிசையாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான விசாரணைகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில், வங்க மொழி பாடகி லங்காஜிதா சக்கரவர்த்தி அதிர்ச்சி குற்றச்சாட்டை பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் மீது சுமத்தியுள்ளார்.
ராஜேஷ் ரோஷன் பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் சித்தப்பா ஆவார். பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
ராஜேஷ் ரோஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள லக்னாஜிதா podcast ‘Straight Up With Shree’ என்ற பாட்ஸ்காட்டில் கூறுகையில், ‘1990 ஆம் ஆண்டுகளில் மும்பையில் நான் வசித்தேன். ஒரு விளம்பரம் தொடர்பாக விவாதித்து கொண்டிருந்தோம். அங்கிருந்த ராஜேஷ் ரோஷன், உங்களுக்கு பாட வாய்ப்பு உள்ளது. என்னை சாந்தாகுருசிலுள்ள வீட்டில் வந்து பார்க்கவும் என்று அழைத்தார்.
அவரது வீட்டுக்கு நான் சென்ற போது, மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார். அவர் இசை அமைக்கும் அறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். எனக்கருகில் இருந்த அவர் சில ஜிங்கில்ஸ்களை பாடி காட்டினார். பின்னர், எனது பணிகள் குறித்து கூறும்படி கேட்டுக் கொண்டார். நானும் எனது பாடல்கள் பற்றி கூறிக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது ஸ்கட்டுக்குள் அவரின் கை போனது. உடனடியாக, நான் துள்ளி எழுந்து விட்டேன். உடனே, சுதாரித்து கொண்ட அவர் அறையில் இருந்து எதுவும் சொல்லாமல் வெளியே சென்று விட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, ராஜேஷ் ரோஷனுக்கு 69 வயதாகிறது. 1990களில் நடந்த சம்பவத்தை பற்றி இப்போது வெளியே கூறுவது ஏன்? உள்நோக்கம் கொண்டதா? என்று நெட்டிசன்கள் பாடகியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே வேளையில், இந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாலிவுட் திரையுலகம் விழித்துக் கொள்ள வேண்டுமென்றும் சிலர் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
மருத்துவமனையில் இருந்த போது ஈவிகேஎஸ் என்னிடம் பேச விரும்பினார்… ஆனால் : ஸ்டாலின் உருக்கம்!
மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர் ஈவிகேஎஸ் : திருமாவளவன் இரங்கல்!