நடிகை கீர்த்திசுரேஷ் தனது 15 ஆண்டு கால நண்பர் ஆன்டணி தாட்டிலை திருமணம் செய்து கொள்ள போகிறார்.
கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் ஒன்றாக படித்ததாகவும், இன்றுவரை இருவரும் காதலர்களாக பயணித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் வரும் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டனியை பொறுத்தவரை கேரளாவில் உள்ள ரெசார்ட் ஒன்றின் உரிமையாளர் என்றும், துபாயில் தொழிலதிபராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் , ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால் சமூகவலைத் தளத்தில் கீர்த்தி சுரேஷை விமர்சிக்கின்றனர்.
சமீபத்தில் அபுதாபியில் மசூதி அருகே நின்று எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கீழ்தான் பலரும் வெறுப்பை உமிழும் வகையில் கமெண்ட் செய்துள்ளனர்.
இது தென்னிந்தியாவின் அடுத்த லவ் ஜிகாத் என்று ஒருவர் விமர்சித்துள்ளார். இந்து இளைஞர்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டு கொண்டிருக்க மற்ற மதத்தவர்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர் என்று இன்னொருவர் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரி படத்துக்கு கீர்த்தி சுரேஷின் தாயாரும் நடிகையுமான மேனகா ஆதரவு தெரிவித்திருந்தார். இதையும் ஒருவர் தனது கமெண்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, கீர்த்தி சுரேஷின் தந்தை ஜி.சுரேஷ் குமார் கேரள கவுமதி ஊடத்திடம் , தனது வருங்கால மாப்பிள்ளை குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘ஆண்டனி இந்து கோவிலுக்கும் செல்வார். அவர், கீர்த்தி சுரேஷை மதம் மாற சொல்லவில்லை. கீர்த்தியின் திருமணம் மத தொடர்பு இல்லாமல் நடக்கும் அல்லது இரு மத முறைப்படி நடைபெறும் ”என்று தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் தந்தை கேரளத்தையும் தாய் மேனகா தமிழகத்தையும் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கிட்டாரிஸ்ட் மோகினி தே குறித்து சாயிரா பானு வழக்கறிஞர் சொன்ன தகவல்!
ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிவது உறுதியா ? – நீதிமன்றத்தில் ஆஜரான பின்னணி!
Comments are closed.