இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ’லால் சலாம்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் கம்யூனிசத்தின் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் தான் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார்.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் சில காட்சிகள் டெலீட் ஆகிவிட்டதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. டெலீட் ஆன காட்சிகளை மீட்டெடுக்கும் பணியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பொங்கல் ரேஸில் இருந்து லால் சலாம் படம் பின்வாங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே போல் சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தின் சில காட்சிகளும் எடிட்டிங் செய்யும் போது டெலீட் ஆன செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசர் வெளியீடு மற்றும் ஆடியோ லாஞ்ச் விழா நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஜப்பான், ஜிகர்தண்டா 2 – சிறப்பு காட்சிக்கு அனுமதி!
Bigg Boss 7 Day 38 : அம்பலமான நிக்சனின் ஆபாச கமெண்ட் – ஒன்னும் செய்யாத ‘பிக் பாஸ் ஃபெமினிஸ்ட்ஸ்’!