பாடகி சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்து இன்று (மே 15) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவி மற்றும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில், இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்தார்.
இதனை எதிர்த்து ஜி.வி.பிரகாசை பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இந்த விமர்சனத்திற்கு நடிகர் ஜி.வி. பிரகாஷ் அறிக்கை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
அதில், “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2024
பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.
தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…?
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.
அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.
ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று குஷ்பு… இன்று ராதிகா… மீண்டும் கைதாகும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி?
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது – மெட்ரோ நிர்வாகம்