தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது பல பாடல்கள் 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பிளே லிஸ்டுகளை எப்போதும் ஆக்கிரமித்திருக்கும்.
அப்படியான ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த நாள் இன்று ஜனவரி 8 அவரைப் பற்றிய 10 சுவாரஸ்யத் தகவல்களைத்தான் இப்போது தெரிஞ்சுக்கப்போறோம்!
12 வயதிலேயே இசைக் கலைஞராகத் தனது பணியை ஆரம்பித்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ரஹ்மான், யுவன், கார்த்திக் ராஜா என பல இசையமைப்பாளர்களிடம் இசைக்கருவிகள் வாசித்திருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் முதல் சம்பளம் 200 ரூபாய். இந்த சம்பளத்தோடுதான் `மின்னலே’ படத்துக்கு முன்பே 600 படங்களில் வேலை பார்த்திருக்கிறார்.
ஆளவந்தான் படம் மூலம் இசையமைப்பாளராக இவரை அறிமுகம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் தாணு விரும்பினார். ஆனால், அப்போதே மின்னலே பட வேலைகளை ஆரம்பித்து விட்டார் ஹாரிஸ்.
ஹாரிஸ் பயங்கரமான Foodie. வித்தியாசமான, நல்ல உணவுகளைத் தேடித்தேடி சாப்பிடக்கூடியவர்.
சென்னையில் இவர் வைத்திருக்கும் ஸ்டுடியோ ஹெச், இந்தியாவிலேயே மிக முக்கியமான ஒரு ஸ்டுடியோவாகப் பார்க்கப்படுகிறது. உலகின் தலைசிறந்த அம்சங்களோடு இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டிருக்கிறது.
கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் போது ரசிகர்கள் மட்டும் கொண்டாடும் படியான பாடல்களாக இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்வாராம். அதனால்தான், மாஸ் ஹீரோக்களுக்கு பல மெலடி பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஹாரிஸ் இசையமைத்த மூங்கில் காடுகளே பாடல்தான் இன்றும் விக்ரமின் காலர் ட்யூனாம்.
பயங்கரமான காமெடி சென்ஸ் கொண்டவர் ஹாரிஸ் ஜெயராஜ். கவுன்ட்டர்ஸ் அடிச்சு கலாய்கிறதும் அவருக்கு கைவந்த கலை. ஆனால், தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும் போது மட்டும்தான் அந்த மோடுல இருப்பாராம்.
வொர்க்ல ரொம்பவே சின்சியர். கல்யாணத்துக்கு அடுத்த நாளே வேலைக்கு போயிருக்கார்னா பார்த்துக்கோங்க. ரஹ்மான் மாதிரி இவருக்கும் லேட் நைட் வொர்க் பண்றதுதான் பிடிக்குமாம்.
கடவுள் பக்தி ரொம்பவே ஜாஸ்தி. நாம பண்ற எல்லாத்தையும் கடவுள் பார்த்துட்டே இருக்கார்னு ரொம்ப நம்புற ஆள். தன்னோட ரோல் மாடலாக உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரைத்தான் நினைப்பாராம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சென்னையில் அதிகாலையில் களைகட்டிய மாரத்தான்!
எனக்காக சண்டை போட்டவர் டி.ஆர்.பாலு: நட்பை நினைவு கூர்ந்த முதல்வர்!