ஹரிஷ் கல்யாணின் “டீசல்” படம் ஷூட்டிங் ஓவர்!

Published On:

| By Selvam

பியார் பிரேமா காதல், ஓ மணப் பெண்ணே என தொடர்ந்து தனக்கு ஏற்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

தற்போது இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் டீசல். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் டீசல் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டீசல் படத்தை தெர்ட் ஐ புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.பி.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் 5000 க்கு மேற்பட்டோரின் உழைப்பில் 75 லொகேஷன்களில் 100 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது நிறைவு பெற்றதாக இன்று (நவம்பர் 11) Diesel Wrapped என்ற வீடியோவை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கூடிய விரைவில் டீசல் படம் குறித்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? – அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share