பிரசாந்த் வர்மா – தேஜா சஜ்ஜா கூட்டணியில் வெளியான ஹனுமான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
‘ஹனுமான்’ படத்தில் ஹீரோ தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்திருந்தார். ஹனுமந்து எனும் சூட்டிகையான இளைஞன், ஹனுமனின் அருளைப் பெற்று சூப்பர் ஹீரோவாக எப்படி மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதைக்கரு.
அஞ்சனாத்ரி என்ற கற்பனைக் கிராமத்தில் நடப்பது போல இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் அமைத்திருந்தார். அறிவியல் மூலம் தனது சக்தியைப் பெறும் சூப்பர் ஹீரோவான மைக்கேலை, ஹனுமந்து எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் படத்தின் திரைக்கதையாகும்.
தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயருடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி, வினய், வெண்ணிலா கிஷோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான ஹனுமான் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
இந்தநிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது.
–ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rain Update: இந்த இடங்களுக்கு இடியுடன் கூடிய மழை உண்டு!
நம்பர் 1 இடத்தை தக்கவைத்த திரிஷா… சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!