ஹனுமான் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போட் இதோ!

Published On:

| By Selvam

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ஹனுமான்.

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக ஹனுமான் படம் வெளியானது. நடிகர் வினய் ராய் இந்த படத்தில் வில்லனாக நடிக்க, நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடவுள் அனுமானின் சக்திகள் ஹீரோவுக்கு கிடைத்ததும் அவர் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறார். அதன்பின் சூப்பர் வில்லன், ஹீரோவின் சக்திகளை அபகரிக்க முயற்சி செய்கிறான். இறுதியில் ஹீரோ ஹனுமானின் சக்திகளை கொண்டு வில்லனை எப்படி அழித்தார் என்பதே இந்த படத்தின் கதை.

குறைந்த பட்ஜெட்டில் பக்காவான VFX காட்சிகள் மூலம் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துவிட்டனர் ஹனுமான் படக்குழுவினர். மேலும் இந்த படம் Prasanth Varma Cinematic Universe- இன் (PVCU) முதல் படமாக வெளியாகி இருக்கிறது.

ஹனுமான் படம் வெளியான முதல் நாளில் இருந்தே யாரும் எதிர்பார்க்காத அளவில் பாக்ஸ் ஆபீஸில் அதிகமாக வசூல் செய்ய தொடங்கிவிட்டது.

இந்நிலையில், தற்போது ஹனுமான் படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இயக்குனர் பிரசாந்த் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஹனுமான் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரசாந்த் வர்மா இயக்கத்தில் “அதீரா” என்ற சூப்பர் ஹீரோ படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு ஹனுமான் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுரை மஞ்சுவிரட்டு: பார்வையாளர் பலி!

அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share