ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கார்டியன்’ திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
குரு சரவணன் – சபரி இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் இப்படத்தினை ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ‘வாலு’, ‘ஸ்கெட்ச்’, ‘சங்கத்தமிழன்’போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.
சாம் C.S மிரட்டலான இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கே.ஏ.சக்திவேல் மற்றும் படத்தொகுப்பாளராக எம்.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இந்தநிலையில் வருகின்ற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று ‘கார்டியன்’ திரைப்படம் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
முன்னதாக ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘மகா’ மற்றும் ‘பார்ட்னர்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பினை பெறவில்லை. இதனால் வித்தியாசமான இந்த கதையில் ஹன்சிகா ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.
எனவே இந்த ‘கார்டியன்’ ஹன்சிகா மோத்வானியை கரை சேர்க்குமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மேரி கிறிஸ்துமஸ், லவ்வர், லால் சலாம் படங்களின்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
பாஜகவின் தேர்தல் பத்திர ரகசியங்கள்..தேர்தலுக்கு முன்பு வெளியிட முடியாது..SBI சொல்வதன் பின்னணி என்ன?