விவாகரத்து: சோகத்தில் ஹன்சிகா குடும்பம்!

சினிமா

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை ஹன்சிகா குடும்பத்தில் எழுந்திருக்கும் விவாகரத்து பிரச்சினை பலரையும் வருத்தமடையச் செய்துள்ளது.

தென்னிந்திய சினிமா உலகில் ’சின்ன குஷ்பு’ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர், தமிழில் ’மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ’எங்கேயும் காதல்’, ’பிரியாணி’, ’ஆம்பள’, ’புலி’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’சிங்கம்-2’, ’சேட்டை’, ’ரோமியோ ஜூலியட்’, ’போகன்’, ‘குலேபகாபலி’, ’மான் கராத்தே’, ’அரண்மனை 1’மற்றும் 2உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

கொஞ்ச நாட்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ஹன்ஷிகா, நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியாவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி, ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமையான மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்துகொண்டார்.

hansika brother separated from wife

இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமண வைபோகத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

திருமணத்திற்கு பிறகு அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

அவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்களும், திரை உலகினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

திருமணத்துக்குப் பிறகு மாமியார் வீட்டில் தங்கி இருக்கும் ஹன்சிகா, அவரது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்துக்கு ஏற்ற உணவுகளை சமைத்துக் கொடுத்து வருகிறாராம்.

அதிலும், சமீபத்தில் ஹன்சிகா தன் கையால் செய்து கொடுத்த அல்வாவை, அவரது கணவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், ஹன்சிகா வீட்டில் புது பிரச்சினை வெடித்துள்ளது. ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானி, தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து முடிவுக்கு சென்றுள்ளார்.

hansika brother separated from wife

பிரசாந்த் மோத்வானிக்கும், அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் இடையே அண்மைக்காலமாக சுமுகமான உறவு இல்லை எனவும்,

அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர்களது குடும்ப வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையடுத்தே, அவர்கள் தற்போது பிரிய முன்வந்துள்ளனர். விவாகரத்து கோரி, பிரசாந்த் மோத்வானி விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆவதற்குள்ளேயே அவரது சகோதரர் பிரசாந்த் எடுத்திருக்கும் இந்த முடிவால் அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வருத்தமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளதாம்.

ஜெ.பிரகாஷ்

அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை: முதல்வர் திறப்பு!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த உச்ச நீதிமன்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *