சீதாவாக சாய் பல்லவியும், ராமராக ரன்பீர் கபூரும் நடிக்கும் படத்தில் ராவணன் வேடத்தில் யஷ் நடிக்கிறார்.
அவ்வப்போது ஹிட்கள் கொடுத்து வந்த கன்னட ஹீரோ யஷ் கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 படங்களின் வழியாக, தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமாக மாறினார்.
இதையடுத்து அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்தநிலையில் யஷ் ராவணனாக நடிக்கவிருக்கும் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் படம் பாலிவுட்டில் உருவாகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ஹனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபி தியோல் நடிக்கின்றனர்.
இப்படத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ராவணன் வேடத்தில் யஷ் நடிக்கிறார். லட்சுமணன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என கூறப்படுகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் ஜெர்மன் நாட்டின் புகழ் வாய்ந்த ஹான்ஸ் ஜிம்மர் உடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஹான்ஸ் ஜிம்மர், ரஹ்மான் இருவருமே ஆஸ்கர் விருது வென்றவர்கள் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பொழுதே எக்கச்சக்கமாக இருக்கிறது.
ரூபாய் 1௦௦௦ கோடி பட்ஜெட்டில் இப்படம் 3 பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ராமாயணம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெருங்கும் தேர்தல் : தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஐடி ரெய்டு!
‘ரொம்ப க்யூட்’… ரசிகர்களின் வாழ்த்துமழையில் நனையும் அமலாபால்!
அமலாக்கத் துறை வழக்கு ரத்து: தனியார் கட்டுமான நிறுவன வழக்கில் முக்கிய உத்தரவு!
Rain Update: அடுத்தடுத்து மூணு நாளைக்கு மழை இருக்காம்!