தளபதி விஜயின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் தற்போது இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்துள்ளார்.
‘தளபதி 69’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்பது உறுதியான சூழ்நிலையில், இயக்குநர் மட்டும் இன்னும் இழுபறியாகவே இருந்து வருகிறது.
தற்போது வரையிலுமே ஏப்ரல் கடைசியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இயக்குநர் யாரென்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றே கூறப்பட்டு வருகிறது.
கோலிவுட்டை பொறுத்தவரை அட்லி, நெல்சன், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் என அனைவருமே தங்களது அடுத்த படங்களில் பயங்கர பிஸியாக உள்ளனர்.
இந்த நிலையில் விஜயின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்துள்ளார். சமீபத்திய விழா ஒன்றில் கடந்த 2௦23-ம் ஆண்டு ஜனவரி மாதம் விஜய்க்கு கதை சொன்னதாகவும், கதையைக்கேட்டு விஜய் மிகவும் இம்ப்ரெஸ் ஆகி விட்டதாகவும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.
மேலும், ”சுமார் 40 நிமிடங்கள் நான் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. ஷூட்டிங் எப்போது போகலாம் என்று கேட்டார்.
நான் அடுத்த மார்ச், ஏப்ரலில் போகலாம், ஏனென்றால் நான் என்னுடைய கதைக்கே 5 மாதங்கள் எடுத்து கொள்வேன் என்று கூறினேன். அதைக்கேட்டு விஜய் சிரித்தார்”, என்றும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதேபோல விஜயின் கடைசி படமென்பதால் ஹெச்.வினோத் இயக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆச்சரியமாக இந்த ரேஸில் கார்த்திக் சுப்புராஜும் இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ், ஹெச்.வினோத் இருவருக்குமே அடுத்த பட வாய்ப்புகள் இருந்தாலும் கூட விஜயின் படம் தொடங்கிட நாட்கள் இருப்பதால், நிதானமாகவே இயக்குநரை தேர்வு செய்யலாம் என படக்குழு நினைக்கிறதாம்.
அதுதான் இவ்வளவு இழுபறிகளுக்கும் காரணமாக இருக்கிறது. எனவே வழக்கம்போல நாம் இயக்குநர் யாரென்பதை அறிய சிறிது காலம் காத்திருக்க தான் வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…