Thalapathy 69 ‘தடை அதை உடை’… விஜயை இயக்கப்போகும் ‘டாப்’ இயக்குநர்!
விஜயின் கடைசி படத்திற்கான இயக்குநர் வேட்டை தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னணி இயக்குநர் ஒருவரே அவரை இயக்கலாம் என கூறப்படுகிறது. h vinoth direct thalapathy 69
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய் உறுப்பினர் சேர்க்கைக்காக ஆப் ஒன்றையும் வெளியிட்டு, அடுத்தகட்ட பாய்ச்சலினையும் நிகழ்த்தி உள்ளார்.
மறுபுறம் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘GOAT’ படத்திற்கான இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தன்னுடைய 69-வது படத்துடன் சினிமாவில் இருந்தும் விலகுவதாக விஜய் அறிவித்துள்ளார்.
இதனால் கடைசி படத்தில் தளபதி விஜயை இயக்கப்போவது யார்? என அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, ஹெச்.வினோத் ஆகியோர் அவரின் கடைசி படத்தின் இயக்குநர் ரேஸில் இருந்தனர்.
இதில் கதை பிடிக்கவில்லை எனக்கூறி கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே,பாலாஜி இருவரிடமும் விஜய் தரப்பு தெரிவித்து விட்டதாம்.
ஷங்கரும் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, ‘கேம் சேஞ்சர்’ என தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். இதனால் ஹெச்.வினோத்திற்கு விஜய் கிரீன் சிக்னல் கொடுப்பார் என கூறப்படுகிறது.
இதை மேலும் உறுதிப்படுத்துவது போல கமலின் ராஜ்கமல் நிறுவனத்தில் இருந்து தடையில்லா சான்றிதழை (NOC) ஹெச்.வினோத் வாங்கியிருக்கிறார். அதோடு கமல் – ஹெச்.வினோத் இணைவதாக இருந்த ‘கமல் 233’ படமும் டிராப் ஆகிவிட்டதாக தெரிகிறது.
தனுஷ் – ஹெச்.வினோத் படமும் ஜூனில் தான் தொடங்குகிறது. இதனால் ஹெச்.வினோத் ‘தளபதி 69’ படத்தினை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே தெரிகிறது.
அனைத்து தடைகளும் நீங்கி விட்டதால், இன்னும் சில வாரங்களில் இதுகுறித்த அறிவிப்பினை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடும் என கூறப்படுகிறது. h vinoth direct thalapathy 69
கூடுதல் சுவாரஸ்யமாக கமலுக்கு எழுதிய கதையைத்தான் விஜய்க்கு ஏற்றதுபோல மாற்றி ஹெச்.வினோத் எடுக்கவுள்ளாராம்.
இந்த காம்பினேஷன் உறுதியானால் விஜய் ரசிகர்களுக்கு அது உண்மையான விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”மோடி தான் மீண்டும் பிரதமர்”: பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்
Chennai Metro நிலையங்களில் வரப்போகும் சூப்பர் வசதி!