rebel release date when
ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும், ‘பிரேமலு’ புகழ் நாயகி மமிதா பைஜூ நாயகியாகவும் நடித்திருக்கும் ‘ரெபல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் மமிதா பைஜு பேசுகையில், ”இது எனது முதல் தமிழ்ப்படம். மனதுக்கு மிக நெருக்கமான படம். ஜிவி பிரகாஷ் சார் அருமையான நடிகர். எல்லோரும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளனர். இந்தப்படம் அருமையாக வந்துள்ளது, தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள்”, என்றார்.
தொடர்ந்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், ”ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.
மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன், அவர் தான் ‘டார்லிங்’ படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நிகேஷ் படம் பார்த்துவிட்டு என் தயாரிப்பில் படம் செய்ய அட்வான்ஸ் தந்துள்ளேன். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். மமிதா பைஜு அழகாக தன் கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார்.
ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி”, என்றார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
1980-களில் நடைபெற்ற உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் ‘ரெபல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் போராளியாக நடித்துள்ளார். படம் வருகின்ற 22-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-ராமானுஜம் rebel release date when
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சி.ஏ.ஏ.வை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்: ஸ்டாலின் அறிவிப்பு!
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது ஏன்? – சரத்குமார் பேட்டி!
IPL 2024 : 14 மாத இடைவெளி… மீண்டும் களமிறங்கும் ரிஷப் பண்ட்
IPL 2024: CSK-வின் கேப்டன் ஆகிறாரா ரோகித் சர்மா?