GV Prakash's 25th Movie Title is Kingston

ஜி.வி.பிரகாஷ் 25வது படத்தின் டைட்டில் வெளியானது..!

சினிமா

தமிழ் சினிமாவின் டாப் 10 இசையமைப்பாளர்கள் பட்டியலில்  தவிர்க்க முடியாத ஓர் இசையமைப்பாளராக நிச்சயம் ஜி.வி. பிரகாஷ் இடம் பிடித்திருப்பார். இசைத் துறை போலவே தற்போது நடிப்பு துறையிலும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் மிகக்குறுகிய காலத்திலேயே தற்போது கதாநாயகனாக 25வது படத்தில் நடிக்க உள்ளார். ஜி.வி. பிரகாஷின் 25ஆவது படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்குகின்றார்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ஜி.வி. பிரகாஷும் திவ்யபாரதியும் இணைந்து நடித்த  ‘பேச்சுலர்’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷின் 25ஆவது படத்திற்கு “கிங்ஸ்டன்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. GV 25 டைட்டில் லுக் போஸ்டரை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். இந்த படம் “India’s First Sea Horror” அட்வென்சர் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை parallel Universe Pictures நிறுவனம் சார்பில் ஜி.வி.பிரகாஷ், Zee Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

கதாநாயகனாக தனது 25 வது படத்தில் நடிக்க தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் கூடிய விரைவில் ஒரு இசையமைப்பாளராக தனது 100வது படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.  சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 43வது படம் தான் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க போகும் 100வது படம் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

அமர்த்தியா சென் மரண செய்தி… ’வதந்தி’ என உறுதி செய்த மகள்!

காவிரியாக ஓடும் கள்ளச்சாராயம் : கண்டுக்கொள்ளுமா காவல்துறை?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *