இசையமைப்பாளராக தனது 100 வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ’வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
பின்னர் , இவர் இசையில் வெளியான பல பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே இவர் படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான ’சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
இதனிடையே சூர்யாவின் 43 வது படத்தை சுதா கொங்கரா இயக்க அதில் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
சூர்யாவின் பிறந்த நாள் அன்று இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,“ ஜி.வி.100 விரைவில்” எனதெரிவித்துள்ளார். இவரது இசையில் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள ’எமர்ஜென்சி’ திரைப்படம் வரும் நவம்பரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
IND vs BAN: வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி!
கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி தொடரும்: ஜெலன்ஸ்கி