நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரிபெல் படம் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. அதனை தொடர்ந்து அவரது 25வது படமான கிங்ஸ்டன் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புறநானூறு படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவி இசையமைக்கும் 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ’ஸ்டார் டா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் சினிமா பையன் என்று அழைக்கப்படும் அபிஷேக் ராஜா இயக்குகிறார்.
Time to Shine ✨ #StarDa
Keep gazing to know more ! pic.twitter.com/pEzephocf2
— G.V.Prakash Kumar (@gvprakash) January 9, 2024
இந்த படத்தின் அறிவிப்பை முன்னிட்டு ஸ்டார் டா படத்தின் போஸ்டரை ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
யூடியூப் சினிமா விமர்சகராக இருந்த ப்ளூ சட்டை மாறன் ஆன்டி இந்தியன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அவரை தொடர்ந்து தற்போது சினிமா பையன் அபிஷேக் ராஜாவும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஸ்டார் டா படம் குறித்த மற்ற தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் – அபிஷேக் ராஜா கூட்டணியில் உருவாகும் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
டிஜிட்டல் திண்ணை: அதிமுக வேட்பாளர் பட்டியல் – எக்ஸ்க்ளுசிவ்!
ஸ்டிரைக்கை தொடர்ந்து அதிரடி போராட்டத்தை கையிலெடுத்த சிஐடியு