ஜீ.வி பிரகாஷின் ரெபெல் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

சினிமா

இசையமைப்பாளராக பல வெற்றி படங்களில் பணியாற்றிய ஜீ.வி பிரகாஷ், 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் நடிப்பு குறித்து வெளியான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டு இன்று பலரின் ஃபேவரைட் நடிகராகவும் மாறியுள்ளார் ஜீ.வி பிரகாஷ்.

இந்நிலையில் இவரது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீ.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெபெல். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 26) ரெபெல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் கையில் தீ வைக்கப்பட்ட பெட்ரோல் பாட்டிலுடன், முகத்தில் இரத்த காயங்களோடு ஜீ.வி பிரகாஷ் ஆக்ரோஷமாக நிற்பது போன்ற ஸ்டில் இடம்பெற்றுள்ளது.

டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜீ.வி பிரகாஷின் ரெபெல் படத்தை தயாரித்துள்ளார் ஞானவேல்ராஜா. அந்த இரண்டு படங்களுக்கும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்ததால் கண்டிப்பாக ரெபெல் படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செல்வராகவனின் முதல் தெலுங்கு படம் “RT4GM”

அக்டோபர் 31… அமைச்சரவை கூட்டம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *