படமா இது? – ‘தங்கலான்’ பார்த்து மெர்சலான ஜி.வி.பிரகாஷ்
“தங்கலான்” திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை இன்று (ஜூலை 1) இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள “தங்கலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக வெளியான “தங்கலான்” படத்தின் டீசரில் நடிகர் விக்ரமின் தோற்றமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
“தங்கலான்” படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இசைப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட பதிவில், “தங்கலான் பின்னணி இசைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. என்னுடைய சிறப்பான பணியை கொடுத்துள்ளேன். என்ன ஒரு அருமையான படம்.
இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒரு அற்புதமான டிரைலர் உங்கள் மனதில் பதியப் போகிறது. தங்கலானுக்காக இந்திய சினிமா தயாராக உள்ளது” என ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம்
3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம்: மாநில கல்விக் கொள்கை பரிந்துரை!