கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான “செத்தும் ஆயிரம் பொன்” திரைப்படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.
அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியர்’.
இந்த படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் அர்ஜுன் (Arjun) என்ற கதாபாத்திரத்திலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தீபிகா (Deepika) என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்த கதாபாத்திரங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களை தான் இந்த படத்திற்கு டியர் (DeAr) என தலைப்பாக வைத்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், இளவரசி, ரோகிணி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக உருவாகியுள்ள டியர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “தலவலி” சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் தற்போது டியர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான “மஜா வெட்டிங்” (Maja Wedding) வீடியோ வெளியாகி உள்ளது. ஹீரோ, ஹீரோயின் திருமண நிகழ்ச்சி சீனில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.
இளம் தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் ஒரு ஜாலியான குத்து பாடலாக வெளியாகி இருக்கிறது. மேலும் ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் குத்தாட்டமும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
கொட்டும் மழையில் திருமணம் செய்து கொள்வது போல, இந்த பாடலில் இடம்பெற்றுள்ள காட்சி நிச்சயம் 90ஸ் மற்றும் 2k கிட்ஸின் கவனத்தை ஈர்க்கும்.
டியர் படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-கார்த்தி ராஜ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்.. கேம் சேஞ்சர் அப்டேட்..!
இன்சூரன்ஸ் இல்லாத காரில் ஊர்வலம் வந்த வேட்பாளர்… அபராதம் விதித்த போலீசார்!
ராமநாதபுரம் : 5 ஓபிஎஸ்-கள் போட்டி!