ஏன்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜஸ்டின் இசையமைத்துள்ள படம் அடியே.
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கௌரி கிஷன் மற்றும் வெங்கட்பிரபு, பயில்வான் ரங்கநாதன் மற்றும் பலர்நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நாயகனாக இதுவரை நடித்த படங்களில் இருந்து, மிகவும் வித்தியாசமான கதைகளத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்கிறார் இயக்குநர். ஜிவி பிரகாஷுக்கு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படத்தின் கதை.
இதில் அவர் கௌரி கிஷனை காதலிக்க அந்த காதல் கை கூடுகிறதா? இல்லையா? என்பதே திரைக்கதை என்றார் இயக்குனர்.
காமெடி, காதல், ஆக்ஷன், என அனைத்தும் கலந்த கலவையாக உள்ள அடியே படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
காதல், காமடி கலந்த திரைப்படத்தின் டிரைலர் அரசியல் பகடி கலந்து வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த ‘யோகன் அத்தியாயம் ஒன்று’ படத்தின் 150 வது நாள் வெற்றி விழாவுக்கு இந்திய பிரதமர் விஜயகாந்த் செல்கிறார்’ என்ற டிரைலரின் முதல் வசனமே மொத்த டிரைலரையும் பார்க்க தூண்டுகிறது.
அடுத்து ‘மியூசிக் டைரக்டர் பயில்வான் ரங்கநாதன் இரண்டு ஆஸ்கர் வாங்கிருக்காரு’, ‘கோமாளி படத்துல ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறாரா?’,
‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம், மிஷ்கினின் ‘பொறுக்கி பய சார்’ போன்ற வசனங்களும், ‘மயக்கம் என்ன’, ‘மாநாடு’ பட ரெஃபரன்ஸ் என பகடிகள் ஏராளம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இராமானுஜம்
WI vs IND: சூர்ய குமார் யாதவ் அதிரடி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா
உயர் கல்வியில் பொது பாடத்திட்டம்: அகமும் புறமும்!- பகுதி -2