தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தற்போது தனது 25 வது படமான கிங்ஸ்டன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் ஐஷ்வர்யா ராஜேஷ், ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்துள்ள டியர் படம் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஜிவி பிரகாஷ் விகடன் பத்திரிக்கை நிறுவனத்திற்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். அந்த இன்டர்வியூவில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜிவி பிரகாஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருந்ததாக ஒரு செம அப்டேட்டை கூறியிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்க இருந்ததாகவும் அந்த படத்திற்கு இயக்குனர் அட்லி வசனம் எழுதி இருந்தார் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும், அந்த படத்தின் கதை வெற்றிமாறன் வாழ்க்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் ஒரு சில காரணத்தினால் அந்த ப்ராஜெக்ட் டேக் ஆப் ஆகவில்லை என்றும் கூறியிருந்தார்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ளம் வடிந்துவிட்டாலும் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? – சுகாதாரத்துறையின் ஆலோசனைகள்!
மழை பாதிப்புக்கு திமுக அரசே பொறுப்பு: எடப்பாடி தாக்கு!