அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்

சினிமா

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷின் இசைக்கென ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இசையமைப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஜிவி பிரகாஷ் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்திலேயே மிக அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு இசையமைத்து அந்த படங்களின் வெற்றிக்கு தனது இசையின் மூலம் உறுதுணையாக நின்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதன்பின் 2015 ஆம் ஆண்டு டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஜி.வி பிரகாஷ். அன்றில் இருந்து இன்று வரை நடிகராகவும் இசையமைப்பாளராகவும் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ரெபெல் படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் தனது 25 வது படமான கிங்ஸ்டன் படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இயக்க உள்ள புதிய படத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்க உள்ளதாக அவரே சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் கூறியிருக்கிறார். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் படமான Gangs of Wasseypur படத்திற்கு ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இசையமைப்பாளராக கேப்டன் மில்லர், தங்கலான், எமர்ஜென்ஸி, டியர், சைரன், மிஷன் சப்டர் 1, ரெபெல், SK 21, கிங்ஸ்டன், சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக், _புறநானூறு (சூர்யா 43), சியான் 62 ஆகிய படங்கள் ஜிவி பிரகாஷுக்கு லைன் அப்பில் உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் _புறநானூறு (சூர்யா 43) படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை ரயில்கள்: வழக்கம் போல இயங்கும்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0