இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் கிங்ஸ்டன். இது ஜிவி பிரகாஷின் 25ஆவது படம். இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார். இந்த படம் “India’s First Sea Horror” அட்வென்சர் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை parallel Universe Pictures நிறுவனம் சார்பில் ஜி.வி.பிரகாஷ், Zee Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரும் கோடை விடுமுறைக்கு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்ததாக ஜிவி பிரகாஷின் நடிப்பில் ரெபெல்,கள்வன், டியர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. கதாநாயகனாக தனது 25 வது படத்தில் நடித்து முடித்துள்ள ஜி.வி.பிரகாஷுக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அவரே பாராட்டிட்டாரு” மகிழ்ச்சியில் திளைக்கும் ‘லவ்வர்’ மணிகண்டன்
சவரனுக்கு ரூ.160 அதிரடியாக குறைந்த தங்கம் விலை!