“ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ், பசில் ஜோசப், அனஸ்வர ராஜன், யோகி பாபு, நிக்கிலா விமல் ஆகியோர் நடிப்பில் வெளியான “குருவாயூர் அம்பலநடையில்” என்ற காமெடி திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 என்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.
தனது தங்கையின் திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கும் பிரித்விராஜ், ஆனால் பிரித்விராஜன் தங்கையை திருமணம் செய்து காட்டுவேன் என்று சபதம் எடுக்கும் பசில் ஜோசப் இதற்கிடையில் ஏற்படும் மற்ற பிரச்சனைகள் என ஒரு திருமணத்தை மையப்படுத்தி மிக நகைச்சுவையாக திரைக்கதையை நகர்த்தியிருப்பார் இயக்குநர் விபின் தாஸ்.
இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தது மட்டுமின்றி படம் வெளியாகி 18 நாட்களில் உலக அளவில் 85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கேரளாவில் மட்டும் இந்த படம் 43 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்திற்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் 160 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.
அதனைத் தொடர்ந்து தற்போது குருவாயூர் அம்பலநடையில் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று மெகா ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது பிரித்விராஜ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை : முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை!
தபால் ஓட்டு நிலவரம் : நெல்லையில் பாஜக முன்னிலை!
பாஜக 17, காங்கிரஸ் 1 இடங்களில் முன்னிலை – தேர்தல் ஆணையம்!
சிவகார்த்திகேயன் தயாரித்த ’குரங்கு பெடல்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?