அல்லு அர்ஜூனின் அலா வைகுந்தபுரம்லு, ஜூனியர் என்டிஆரின் அரவிந்த சமேத வீர ராகவா போன்ற மாஸ் ஆக்சன் படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ’குண்டூர் காரம்’.
இந்த படத்தில் நடிகர் மகேஷ்பாபு உடன் இணைந்து ஶ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த தமன் குண்டூர் காரம் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இயக்குனர் த்ரிவிக்ரமின் வழக்கமான ஸ்டைலில் குண்டூர் காரம் ஒரு மாஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.
குண்டூர் காரம் படத்தின் போஸ்டர்கள் மற்றும் புரோமோ வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி செம வைரலானது. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு வில்லேஜ் லுக்கில் சூப்பர் ஸ்டைலாக உள்ளார்.
தற்போது குண்டூர் காரம் படத்திலிருந்து “தம் மசாலா பிரியாணி” என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. முழு பாடல் வீடியோ வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#DumMasala Promo IS HERE 🔥
It’s time to Celebrate Our Dear #Superstar @urstrulyMahesh gaaru ♥️🧨
My dear dir #Trivikram gaaru ✊♥️Here is our #highlyinfllammable 🔥🔥🔥🔥✊#GunturKaaramFirstSingle PROMO
FULL Song From NOV 7 th 🔥🧨💿🌶️https://t.co/EanbfevDcO
— thaman S (@MusicThaman) November 5, 2023
மேலும் சங்கராந்தி பாண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கார்த்திக் ராஜா
உயிருக்கு ஆபத்தாகும் காற்று… டெல்லியில் நவம்பர் 10 வரை பள்ளிகள் மூடல்!
பெண்கள் பாதுகாப்பு தான் காரணமா?: பிரதீப்புக்கு சப்போர்ட் செய்த கவின், சினேகன்