நடிப்பில் பிசியாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். சில மாதங்களாகவே பைக் பயணம் மேற்கொண்டு வந்த அவர், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.
அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இதில் அஜித்திற்கு வில்லனாக அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த அஜித்தின் கார் விபத்துக்குள்ளான வீடியோ வெளியானது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாரா என்று ஆச்சரியத்தில் மூழ்கினர்.
இதற்கிடையில் விடாமுயற்சிக்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது .
ஒரு சில படங்களிலேயே அஜித்தின் கால்ஷீட் பெற்ற அவர் என்ன செய்யப் போகிறார்? என்று கோலிவுட் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாவதால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஹீரோயின் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி சமீபத்தில் வெளியாகி சக்கைக்போடு போட்ட ‘குண்டூர் காரம் ‘ திரைப்படத்தின் ஹீரோயின் ஸ்ரீலீலா இதில் நடிக்க இருக்கிறாராம். மகேஷ் பாபு உடன் அவர் ஆட்டம் போட்ட பாடல் சமீபத்தில் மிகவும் வைரலானது.
தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள ஸ்ரீலீலா இதன்மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும் என்று கூறப்படுகிறது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?
RCB vs KKR: சேர்க்கை தான் சரியில்ல… மீம்ஸ் போட்டு ஆறுதல் தேடும் ரசிகர்கள்!
#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… ‘என்னமோ ஏதோ’ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!