தமிழ் திரை உலகில் எண்ணற்ற பாடல்களால், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இளையராஜாவின் பாடல்களுக்கு, இசையமைத்த கிடாரிஸ்ட் கே. சந்திரசேகரன் உயிரிழந்ததை தொடர்ந்து, மிகவும் வேதனையோடு இளையராஜா வீடியோ வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
இளையராஜா இசையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில பாடல்கள் எப்போதுமே ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இருக்கும்.
அந்த வகையில், இளையராஜா இசையமைத்த பாடல்களான இளையநிலா பொழிகிறதே, பாடும் வானம் பாடி போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து, தன்னுடைய கிடாரிஸ்ட் இசையின் மூலம்… பாடல்களை மெருகேற்றியவர் சந்திரசேகரன்.
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், தன்னுடைய 79 வயதில் நேற்று இரவு (மார்ச் 8) மாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் கிடாரிஸ்ட் கே.சந்திரசேகரன் மரணம் குறித்து இளையராஜா வீடியோ ஒன்றை இன்று (மார்ச் 9 )சமூக வலைதளத்தில் வெளியிட்டு, இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் “என்னுடன் பணியாற்றிய, எனக்கு மிகவும் பிரியமான, இசை கலைஞரான கே. சந்திரசேகரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் என்னிடம் இருந்த புருஷோத்தமன் அவர்களின் சகோதரர் ஆவார். நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்தவர்கள்.
அவர் என்னுடன் இணைந்து நிறைய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் தற்போது வரை மக்கள் மனதிலே நீங்காமல் உள்ளன. அவருடைய இறப்பில் மிகவும் வருத்தம் அடைகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
IND VS AUS 3 வது ஒருநாள் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விலை இதோ!