தனது ‘ஆடுஜீவிதம்’ படத்தின் இசை டிராக்கை கிராமி விருது நிராகரித்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் பிலெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘கோட் லைஃப்’.
இந்தத் திரைப்படம் தமிழில் ‘ஆடு ஜீவிதம் ‘ என்கிற பெயரில் வெளியானது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.
இந்தப் படத்தின் சவுண்டு டிராக் கிராமி விருதுகளுக்கு தகுதி பெறவில்லை எனத் தகவல் வெளியானது.
கனெக்ட் சினி என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் ‘ எனது ‘கோட் லைஃப்’ ஆல்பம் கிராமி விருது விதித்த கால அளவை விட ஒரு நிமிடம் குறைவாக இருந்ததால் தகுதி பெறவில்லை” என விளக்கமளித்தார்.
கிராமி விருதுக்கு போட்டியிட அந்த ஆல்பம் 15 நிமிட கால அளவைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ஆல்பம் 14 நிமிடம் மட்டுமே ஒலிக்கக் கூடிய கால அளவைக் கொண்டது.
இதுகுறித்து மேலும் பேசிய ரகுமான், ‘ சென்ற ஆண்டு கிராமி விருதுக்கு எனது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆல்பத்தை நான் அனுப்பவில்லை. ஆக, எல்லா நேரமும் அது சரியாக அமைவதில்லை’ என தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆல்பம் தேசிய விருது பெற்றது.
ஏ.ஆர் ரகுமான் தற்போது ‘தக் லைஃப்’, ‘சாவா’, ‘ஜீனி’, ’காந்து டால்க்ஸ்’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
‘ஸ்காம் 1992’ வெப் சீரிஸின் இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்கும் ‘காந்தி’ என்கிற வெப் சீரிஸுக்கும் இசையமைக்கிறார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாம்சங் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாதது ஏன்?: உதயநிதி பேட்டி!
வேட்டையன் படத்துக்கு சிறப்பு காட்சி… விடுமுறை அளித்த ஆபிஸ்!
“சாம்சங் ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்”… எடப்பாடி வலியுறுத்தல்!
ஒரே நேரத்தில் 50 மருத்துவர்கள் ராஜினாமா: எதற்காக?
பியூட்டி டிப்ஸ்: வறண்ட சருமம் உள்ளவர்களே… இதையெல்லாம் செய்யாதீர்கள்!