விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறர்.
இந்நிகழ்ச்சியில், ஆண் போட்டியாளர்கள் 9 பேர், பெண் போட்டியாளர்கள் 10 பேர் மற்றும் ஒரு திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 போட்டியாளர்களை களம் இறக்கி உள்ளது பிக் பாஸ் சீசன் 6.
ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியின் மூலம் டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து அவருடைய எதார்த்தமான பேச்சுக்களால் ரசிகர்களை மட்டும் இன்றி போட்டியாளர்களையும் கவர்ந்து வருகிறார்.
இவரிடம் யாரெல்லாம் சண்டை போடுகிறார்களோ, அவர்களை தனது பாணியில் கலாய்த்து வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் தான் ரியல் போட்டியே ஆரம்பமாகி உள்ளது.
நாமினேஷன், எவிக்ஷன், கேப்டன்சி என ஏகப்பட்ட டாஸ்க்குகளும் போட்டியாளர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஜிபி முத்துவை தலைவரே…. தலைவரே என அழைத்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இதன்மூலம் அவர் கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெற்றுவிட்டார் போல தெரிகிறது.
அதனால் அவரை கேப்டன் என்று அழைப்பதற்கு பதிலாக தலைவரே என அழைத்து வருகிறார்கள் என்பதை போல் இருக்கிறது புரோமோ வீடியோ.
இதன்மூலம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக ஜி.பி முத்து தேர்வாக உள்ளார்.
இதற்காக நடந்த டாஸ்க்கில் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணான ஜனனிக்கு செம்ம டஃப் கொடுத்து அவர் வெற்றிவாகை சூடி உள்ளார். ஜிபி முத்து கேப்டன் ஆனதால் அவரை இந்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது .
மு.வா.ஜெகதீஸ் குமார்
டி20 உலகக்கோப்பை: அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள் யார் யார் ?
வெள்ளை வேட்டி கட்டுனதுக்கு ஒரு மதிப்பு கிடைச்சிருக்கு: ஜி.பி முத்து