பிக்பாஸ் வீட்டில் ஜி.பி முத்து : வைரலாகும் வீடியோ!

சினிமா

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தொலைக்காட்சியில் இன்று (அக்டோபர் 09 ) மாலை தொடங்கியது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்,

அதே கெட் அப்பில் பிக்பாஸ் அரங்கிற்குள் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல் அங்குள்ள ஒவ்வொரு இடத்திற்கும் சென்று சுற்றிக்காட்டினார்.

பின்னர் மேடைக்கு வந்த உடன் முதல் போட்டியாளரை அறிமுகப்படுத்தினார். அதன்படி டிக்டாக் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன “செத்த பயலே“ புகழ் ஜிபி முத்துவை முதலாவதாக அறிமுகப்படுத்தினார்.

gp muthu is the first contestant enter biggboss tamil season 6

அப்போது ஜிபி முத்து குறித்த வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய ஜிபி முத்து தான் ஆரம்பத்தில் விளையாட்டாக டிக்டாக்கில் வீடியோ போட ஆரம்பித்ததாகவும், பின்னர் நாளடைவில் அதன் மீது தான் அடிமையாகி ஒரு நாளைக்கு 75 வீடியோ போடும் அளவுக்கு தீவிரமாக அதிலேயே மூழ்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

பிக்பாஸ் அரங்கிற்குள் எண்ட்ரி கொடுத்தபோது கூட பையில் கடிதங்களுடன் அவர் மாஸாக எண்ட்ரி கொடுத்ததை பார்த்து ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.

பின்னர் கமலிடம் சென்று அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஜிபி முத்துவிடம், கமல்ஹாசன் ஒரே ஒரு கண்டிஷன் போட்டார்.

அது என்னவென்றால், நீங்கள் யூடியூப்பில் திட்டி பேசும்படி இங்கு வீட்டுக்குள் இருக்க முடியாது என்றார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஜிபி முத்து முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

வீட்டிற்குள் சென்றவர் ”சார் சார் ஒன்னுக்கு கூட நான் ஒத்தயா போக மாட்டேன் என் வீட்ல என்ன விட்ருங்க சார்’ என்று அவருடைய ஸ்டைலில் கமலிடம் அடம்பிடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே யூடியூப் மூலம் பேமஸ் ஆன ஜிபி முத்து பிக்பாஸ் மூலம் எந்த அளவு மக்கள் மத்தியில் பெயரெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நயனுக்கு இரட்டை குழந்தை: அன்றே கணித்த சினிமா ஜோதிடர்!

நயன் விக்கிக்கு டிடி வாழ்த்து!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0