இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் 2-ஆம் பாகத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

படத்தின் வசனங்களும் கமலின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக ‘என் கண்ணு வேணுமானு கேட்டியாமே, எடுத்துக்கோ’ என கமல் சொல்லும் வசனத்தை கொண்டாடி தீர்த்தனர் மீம் கிரியேட்டர்கள்.
தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துள்ள நிலையில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ஏற்கனவே வேட்டையாடு விளையாடு 2 படத்துக்கான திரைக்கதையை 120 பக்கம் வரை எழுதிவிட்டேன். இன்னும் முழுமையாக தயாராகவில்லை. கடைசி அரை மணி நேரத்தை செதுக்கிக்கொண்டு இருக்கிறேன்.
கமல்ஹாசன் ரொம்ப பிஸியாக இருக்கிறார். இதை ஒப்புக்கொள்வாரா என தெரியவில்லை. வேட்டையாடு விளையாடு 2 படத்தை எனது அடுத்த படமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.